#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நேற்றைய போட்டியின்போது மைதானத்திற்க்குள்ளையே பேட்டை தூக்கி வீசிய கிரிஷ் கெய்ல்! வைரல் வீடியோ
நேற்றைய போட்டிக்கு இடையே பஞ்சாப் அணி வீரர் கிரிஷ் கெய்ல் தான் ஆட்டம் இழந்த விரக்தியில் பேட்டை தூக்கி வீசிய வீடியோ காட்சி வைரலாகிவருகிறது.
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலாவதாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்தது. 186 என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 18 வது ஓவரில்லையே 186 ரன்கள் அடித்து வெற்றி பெற்றனர்.
இதனிடையே பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது அந்த அணியின் வீரர் கிரிஷ் கெய்ல் மிகவும் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 99 ரன்கள் அடித்தார். சதம் அடிக்க ஒரு ரன் தேவைப்பட்டநிலையில் ஆர்ச்சர் வீசிய 20 வது ஓவரின் மூன்றாவது பந்தில் கிரிஷ் கெய்ல் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார்.
சதம் அடிக்க முடியாத ஏமாற்றத்திலும், ஆட்டம் இழந்த விரக்தியிலும் கிரிஷ் கெய்ல் பேட்டை தூக்கி வீசி தனது கோவத்தை வெளிப்படுத்தினார். பின்னர் பவுலரிடம் சென்று கைகொடுத்துவிட்டு வெளியேறினார் கிரிஷ் கெய்ல். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Just UNIVERSE BOSS things 🤣😂 pic.twitter.com/YusSiSclkw
— Adam Dhoni (@AdamDhoni1) October 30, 2020