ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நான் மட்டும் பயிற்சியாளராக இருந்தால் கோலியின் நிலைமையே வேறு.. ரிக்கி பாண்டிங் ஆவேசம்!
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வரும் நிலையில் தான் பயிற்சியாளராக இருந்தால் இந்திய அணியை எந்த அளவிற்கு வலுப்படுத்தவேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அறிவித்துள்ளார். இதனால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வேண்டும் என்ற ஆசை ரிக்கி பாண்டிங்கிற்கு வந்து விட்டதோ என தோன்றுகிறது.
இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள ரிக்கி பாண்டி, விராட் கோலியை இந்திய அணியில் கையாளும் விதத்தைப் பற்றி குற்றம் சாட்டி உள்ளார். பல்வேறு திறமைகளை கொண்ட விராட் கோலியை பேட்டிங் வரிசையில் இங்குமங்குமாக அடிக்கடி மாற்றுவது மனநிலையை பாதிக்கிறது. இதனால் அவருடைய ஆட்ட திறனும் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன.
3-வது இடத்தில் களம் இறங்கிய விராட்கோலி சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்துள்ளார். அவருடைய நிலையான இடம் அதுதான் என்பதை அவரது மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த இடத்தில் இறங்கி உன்னைத் தவிர வேறு யாரும் சிறப்பாக ரன் சேர்க்க முடியாது என்ற நம்பிக்கையை அவருக்கு உருவாக்க வேண்டும். இப்படி ஒரு நம்பிக்கையை அவர் மேல் வைத்தால் நிச்சயம் அவரால் சிறப்பாக விளையாட முடியும்.
மேலும் நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தால் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் களம் இறங்குவர். மூன்றாம் இடத்தில் விராட் கோலியும் அடுத்த இடத்தில் ரிஷப் பண்ட் பிறகு தினேஷ் கார்த்திக் அதன் பிறகு ஹார்டிக் பாண்டியா களம் இறங்குவர். இந்த வரிசையில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக இருக்கும். இதில் சூரியகுமாருக்கான இடத்தினை கண்டறிவதும் அவசியம் என ரிக்கி பாண்டிங் குறிப்பிட்டுள்ளார்.q