பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சென்னை அணியில் இருந்து வெளியேறும் பிரபல ஆல்ரவுண்டர்! சோகத்தில் ரசிகர்கள்!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 15 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் டெல்லி , சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளது. இதில், நடப்புக்கு சாம்பியனான சென்னை அணி முதலில் விளையாடிய 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது.
நேற்று மும்பை அணியுடன் நடந்த போட்டியில் சென்னை அணி தனது முதல் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் லுங்கி நிகிடி, காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி, தனது சொந்த காரணங்களுக்காக சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.
இந்நிலையில் சென்னை அணி ப்ராவோவை மட்டும் நம்பியிருந்த நிலையில் நேற்றைய போட்டியில் பிராவோவுக்கு காயம் ஏற்பட்டதால் வரும் சனிக்கிழமை பஞ்சாப்புடன் நடைபெறும் போட்டியில் பிராவோ பங்கேற்கமாட்டர் என தெரிகிறது.