மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல தரிசனம்.. சென்னை வந்திறங்கிய தல தோனி.. களைகட்டப்போகும் சேப்பாக்கம்!
இந்த மாதம் 29 ஆம் தேதி துவங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி இன்று இரவு சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
உலகக்கோப்பை அரையிறுதிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்குபெறாத தோனி இந்த ஐபிஎல் சீசனில் களமிறங்கவுள்ளார். இந்திய அணியில் அவரது எதிர்காலம் என்னவென்பதை இந்த ஐபிஎல் தொடர் நிர்ணயிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளில் இந்திய அணிக்காக பிஸியாக இருந்த தோனி ஐபிஎல் பயிற்சிக்காக கடைசி கட்டத்தில் தான் இணைவார். ஆனால் இந்த ஆண்டு எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாததால் ஒரு மாதத்திற்கு முன்பே அணியினருடன் பயிற்சியில் கலந்துகொள்கிறார்.
எனவே இன்று இரவு தோனி சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது அணி வீரர்களுடன் தோனி பயிற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தோனியை மைதானத்தில் காண ரசிகர்கள் வெகுவாக கூடுவார்கள் என்றும் கணிக்கப்படுகிறது.
THALA DHARISANAM! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/fb7TCiuqHL
— Chennai Super Kings (@ChennaiIPL) March 1, 2020