#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த சீசனின் பல ஆட்டங்களில் சென்னை ரசிகர்களை ஏமாற்றிய சிஎஸ்கே அணி இத மட்டும் செஞ்சுட கூடாது.! ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பு.!
ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று நடக்கும் 44வது லீக் ஆட்டத்தில் தோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த சென்னை அணி இந்த ஆட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பந்துவீச்சை ஆரம்பித்துள்ளது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில், இன்றைய போட்டி சென்னை அணிக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத போட்டியாக இருந்தாலும் மீதமுள்ள மூன்று போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற விட்டாலும், வெற்றி பெறுவதற்கு ஓரளவிற்காவது பாடுபட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனென்றால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்ற சோகத்தில் இருந்தாலும் புள்ளிபட்டியலில் கடைசி என்ற பெயரினை எடுக்க கூடாது என்ற எதிர்பார்ப்புடன் சென்னை ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.