மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தப்பு பண்ணிட்டீங்களே தோனி.. இப்போ என்னாச்சு பாத்திங்களா..! வேதனையில் ரசிகர்கள்.!
ஐபிஎல் 15வது சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டும் ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவை சந்தித்து வருகிறது. இதுவரை நடைபெற்ற தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 210 ரன்கள் குவித்தும் அந்த போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக தனது முதல் மூன்று போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த போட்டியிலாவது வெற்றி பெற்று தனது கணக்கை துவங்குமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த வருட ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே ஏலம் கேட்ட வீரர்கள் இன்று சிறப்பாக ஆடி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மா. சிஎஸ்கே ஏலம் கேட்ட இந்த இளம் வீரர், தனது முதல் போட்டியில் 15 பந்துகளில் 22 ரன்களை விளாசினார். 2வது போட்டியில் 33 பந்துகளில் 61 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அதேபோல் லக்னோ அணி வீரரான தீபக் ஹூடாவை சிஎஸ்கே எடுக்க கடும் போட்டி போட்டது. ஆனால் இவர் முதல் போட்டியில் 41 பந்துகளில் 55 ரன்கள் அடித்தார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 51 ரன்களை விளாசியுள்ளார். இதனையடுத்து திரிபாதியை ஏலம் எடுக்க ரூ.8.25 கோடி வரை செலவளிக்க கடும் போட்டி போட்டது சென்னை அணி. இறுதியில் ஐதராபாத் அணி 8.50 கோடிக்கு வாங்கியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் திரிபாதி 30 பந்துகளில் 44 ரன்களை குவித்துள்ளார். அடுத்ததாக குஜராத் அணிக்காக விளையாடும் ராகுல் தேவட்டியாவை சிஎஸ்கே ஏலத்தில் எடுக்க ஆசைப்பட்டு முடியாமல் போனது. ஆனால் அவரும் இந்தாண்டு முதல் போட்டியில் 24 பந்துகளில் 40 ரன்களை விளாசினார். இவ்வாறு தோனி ஸ்கெட்ச் போட்ட அனைத்து வீரர்களும் இன்று சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனால் சிஎஸ்கேவின் நிலைமை மட்டும் பரிதாபமாக உள்ளது என கருத்து தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.