கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
நேற்றைய ஆட்டத்தில் புதிய சாதனை படைத்த ஹர்பஜன் சிங்! விசில் போடும் சிஎஸ்கே ரசிகர்கள்!
ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இரண்டாவது சுற்றின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றிபெறும் அணி மும்பை அணியுடன் இறுதி போட்டியில் விளையாடும் என்பதால் நேற்றைய ஆட்டம் கடும் எதிர்பார்ப்பாக இருந்தது.
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலிருந்து இறுதிவரை சொதப்பலாகவே ஆடி அடுத்தடுத்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.
நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 38 ரன் எடுத்தார். டெல்லி அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன் மட்டுமே எடுத்தது.
148 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் டுப்ளஸி 50(39), வாட்சன் 50(32) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ரெய்னா 11 ரன்னில் அக்ஸர் ஓவரில் போல்ட் ஆனார். அதேபோல், கடைசி கட்டத்தில் தோனியும் 9 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் 19 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 151 ரன் எடுத்து சென்னை அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் மும்பை அணியுடன் இறுதி போட்டியில் மோதுகிறது சென்னை அணி.
நேற்றைய போட்டிக்கு முன்பாக ஐபிஎல் அரங்கில் 148 விக்கெட் கைப்பற்றியிருந்த சென்னை வீரர் ஹர்பஜன் சிங், நேற்றைய ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதன் மூலம் ஐபிஎல்., அரங்கில் 150 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.
இதன் மூலம் ஐபிஎல்., அரங்கில் அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை கொல்கத்தா வீரர் ப்யூஸ் சாவ்லாவுடன் பகிர்ந்து கொண்டார். மலிங்கா - 167 விக்கெட், அமித் மிஸ்ரா - 157 விக்கெட், ஹர்பஜன் சிங் - 150 விக்கெட்,
ப்யூஸ் சாவ்லா - 150 விக்கெட்.