#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரு ரன்னில் பலகோடிகளை இழந்த சென்னை அணி! புலம்பி தீர்க்கும் சென்னை ரசிகர்கள்!
ஐபில் சீசன் 12 கோப்பையை கைப்பற்றி சாம்பியன்ஷிப் படத்தை வென்றுள்ளது மும்பை அணி. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் மும்பை அணி சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.
நேற்று முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 149 ரன் எடுத்தது. 150 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் பறிபோனதால் கடைசி நேரத்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி போராடி தோல்வி பெற்றது.
மும்பை அணி ஐபில் கோப்பையை கைப்பற்றியதோடு 20 கோடி பரிசு தொகையையும் கைப்பற்றியது. இதில் 10 கோடி மும்பை அணி உரிமையாளருக்கும், 10 கோடி மும்பை அணி வீரர்களும் பகிர்ந்து கொடுக்கப்படும்.
சென்னை அணி இரண்டாவது இடத்தை பிடித்து 12.5 கோடி பரிசு தொகையை கைப்பற்றியது. 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றத்தால் ஐபில் கோப்பையும், சாம்பியன்ஷிப் பட்டமும் பறிபோனதோடு கிட்டத்தட்ட 7 . 5 கோடி பரிசு தொகையும் சென்னைக்கு பறிபோனது.