திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
MS Dhoni: கிரிக்கெட் வாழ்க்கையில் இது கடைசி கட்டம் - சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டன் தோனி..!
நேற்று இரவு 07.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாடா ஐ.பி.எல் 2023 கிரிக்கெட் தொடரின் 29வது ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் - சன் ரைஸஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதன்பின் பேட்டிங் செய்த சென்னை அணி 138 ரன்கள் குவித்து வெற்றி வாகை சூடியது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தோனி, "எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது கடைசி கட்டம். அதனை நான் மகிழ்ச்சியாக கடப்பது முக்கியம் ஆகும்.
நான் சென்னை வரும்போதெல்லாம் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்கள் எனது பேரன்பு வைத்துள்ளனர். எனது பேச்சினை கேட்க சென்னை ரசிகர்கள் எப்போதும் இறுதி வரை காத்திருக்கிறார்கள்" என கூறினார்.