#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரெய்னாவால் இழப்பு எதுவுமில்லை.. அவருக்கு தான் பெரிய இழப்பு.. சிஎஸ்கே ஓனர் அதிரடி கருத்து!
ஐபிஎல் 2020 தொடரில் கலந்துகொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் சுரேஷ் ரெய்னாவும் துபாய்க்கு பயணம் செய்தார். ஆனால் திடீரென்று ரெய்னா இந்தியாவிற்கு திரும்பிவிட்டதாகவும் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக விலகுவதாகவும் தகவல் வெளியானது.
சாரேஷ் ரெய்னாவின் விலகல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள கருத்து அதைவிட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெய்னாவின் விலகல் குறித்து பேசியுள்ள அவர், "ரெய்னாவின் இழப்பால் சிஎஸ்கே அணிக்கு எந்த பின்னடைவும் கிடையாது. ஆனால் இந்த முடிவால் ரெய்னா பலவற்றை இழக்கவுள்ளார். குறிப்பாக அவர் பெரும் தொகையை இழக்கிறார். இதனை கூடிய விரைவில் அவர் நிச்சயம் உணர்வார்.
யாருக்கும் விருப்பம் இல்லையென்றால் போய்க்கொண்டே இருக்கலாம். யாரையும் எதற்காகவும் நான் வற்புறுத்த விரும்பமாட்டேன்" என சீனிவாசன் கூறியுள்ளார். முன்னதாக ரெய்னாவிற்கு துபாயில் ஒதுக்கப்பட்ட ஹோட்டல் அறையில் போதிய வசதி வழங்கப்படாததால் ஏற்பட்ட பினச்சனை காரணமாக தான் அவர் இந்த தொடரை விட்டு விலகிவிட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.