தவான் புது சாதனை!! சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த நேற்றைய போட்டியில் பதிவான பல புதிய சாதனை விவரங்கள்..



CSK vs DC Shikhar Dhawan creates new record

சென்னை டெல்லி அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் கடந்த 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் 18.4 வது ஓவரில் 190 ரன்கள் அடித்து வெற்றிபெற்றனர்.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களான ப்ரித்விஷா மற்றும் தவான் இருவரும் 81 பந்துகளில் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப்  அமைத்தது டெல்லி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்து. இந்த போட்டியின் மூலம் டெல்லி மற்றும் சென்னை அணி வீரர்கள் சில சானையும் படைத்துள்ளார்.

IPL 2021

1. பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் இருவரும் இந்த ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணியின் மூன்றாவது மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப் ரன் இதுவாகும்.

2. ஷிகர் தவான் நேற்று தனது அற்புதமான இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளை அடித்தார், இதன்மூலம் தவான் ஐபில் போட்டிகளில் 601 பவுண்டரிகள் அடித்துள்ளார். இப்போது ஐபிஎல் வரலாற்றில் 600 பவுண்டரிகளை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தவான்.

IPL 2021

3. நேற்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா 54 அடித்து ஐபில் 14 வது சீசனில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்துள்ளார். மேலும் சுரேஷ் ரெய்னாவுக்கு ஐபில் வரலாற்றில் இது 39 வது அரைசதம். ஐ.பி.எல்லில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் சுரேஷ் ரெய்னா தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

4. ஐபிஎல் 2020 இல் டெல்லி அணியுடன் நடந்த இரண்டு லீக் ஆட்டங்களிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. தற்போது ஐபில் 2021 இல் டெல்லி அணியுடன் சென்னை அணி மீண்டும் தோல்வி அடைந்ததால் இதுவரை தொடர்ந்து மூன்று போட்டிகளில் சென்னை அணி டெல்லி அணியுடன் தோல்வியை சந்தித்துள்ளது.