திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிஎஸ்கே அணியில் ரூத்துராஜ்க்கு பதிலாக இவரா.? விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இன்றைய ஆட்டம்.!
ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது.
கொல்கத்தா அணியிடம் பேட்டிங்கை விட வலிமையான பவுலிங் ஆர்டர் உள்ளது. கொல்கத்தாவிடம் சிறப்பான ஸ்பின் பவுலிங் வீரர்கள் இருக்கிறார்கள். சிஎஸ்கே அணியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக இருந்தாலும் சின்ன சின்ன குறைகளை திருத்த வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி நிர்வாகம் உள்ளது.
குறிப்பாக சென்னை அணியின் துவக்க வீரர் ரூத்துராஜ் குறித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு உள்ளது. இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் ரூத்துராஜ்க்கு பதிலாக உத்தப்பாவை எடுத்தால் சிறந்ததாக இருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். எனவே இன்று நடக்கவிருக்கும் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.