திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இன்று நடக்கும் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்.? ஹாட்ரிக் வெற்றியை தொடருமா சென்னை அணி.?
ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை அணி ஆடிய முதல் ஆட்டத்தில் டெல்லியிடம் படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து சென்னை அணி, அடுத்த இரண்டு ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளை துவம்சம் செய்தது. அதிலும், ராஜஸ்தானுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஒட்டுமொத்த வீரர்களின் பங்களிப்பால் 188 ரன்கள் வரை எடுத்து அபார வெற்றி பெற்றது. சென்னை அணி தற்போது இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில உள்ளது.
கொல்கத்தா அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று இரண்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மும்பை வான்கடே ஆடுகளம் பேட்டிங்குக்கு உகந்தது என்ற நிலையில், அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வதில் தான் இரு அணிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அடங்கியிருக்கிறது. என்பது தெரியும். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற சென்னை அணி ஹாட்ரிக் வெற்றியை நோக்கி முனைப்புடன் விளையாட காத்திருக்கிறது. கொல்கத்தா அணி ஆடிய கடந்த மூன்று போட்டிகளும் சென்னை மைதானத்தில் ஆடியதால் முன்பை மைதானம் கொல்கத்தா வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.