மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குறைவான ஸ்கோரை வைத்து மாஸாக வெற்றிபெற்ற சென்னை அணி.. கொண்டாடும் ரசிகர்கள்.
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இன்றைய ஐபில் T20 போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபில் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும்நிலையில், இன்றைய போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்ததை தொடர்ந்து சென்னை அணி வழக்கம்போல் முதலில் பேட்டிங் செய்தது. பவர்ப்பிலே வரை சிறப்பாக விளையாடிய சென்னை அணி அதனை தொடர்ந்து அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது.
ரஹானே 9 ரன்களிலும், கெய்க்வாட் 32 (21) ரன்களிலும் ஆட்டமிழக்க, சிக்ஸர் மன்னன் சிவம் துபே முதல் பாலிலே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதனை அடுத்து மெயின் அலி மற்றும் ஜடேஜா இருவரும் சற்றும் நிதானமான ஆடி பின் ஆட்டமிழந்தனர்.
ஜடேஜா 43 (26), மெயின் அலி 17 (20) ரன்களில் ஆட்டமிழக்க சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. 168 எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு, சென்னை அணி பவுலர்கள் தொடக்கம் முதலே தண்ணி காட்ட ஆரம்பித்தனர்.
தேஷ்பாண்டே வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் பாரிஸ்டோ மற்றும் ரூசோ இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அவர்களை தொடர்ந்து விளையாடிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி பிலே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.