மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு கட்-அவுட்: தரமான சம்பவம் செய்த கிரிக்கெட் ரசிகர்கள்..!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்தியா வந்து சேர்ந்துள்ள தென்னாப்பிரிக்க அணியினர் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்ட் மைதானத்தில் இன்று மாலை தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி கேரள மாநிலத்தில் விளையாடும் போது அம்மாநில ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடுவது வழக்கம்.
இந்த முறை இந்திய அணி பங்குபெறும் முதல் போட்டியே அங்கு நடைபெற உள்ளதால், "ஆல் கேரளா விராட் கோலி ரசிகர்கள்" சங்கம் போட்டி நடைபெறும் கிரீன் பீல்ட் மைதானத்தின் முகப்பில் விராட் கோலியின் மிகப்பெரிய கட்-அவுட் ஒன்றை வைத்துள்ளனர். அவர்களுக்கு போட்டியாக “ஆல் கேரளா ரோஹித் சர்மா ரசிகர்கள் சங்கம்” சார்பாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவிற்கும் கிரீன் பீல்ட் மைதானத்தில் மிகப்பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவரின் கட்-அவுட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டதுடன் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணி அங்கு விளையாட இருப்பதால் கேரள ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைத்துள்ளனர்.