மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளை எந்த அணி வென்றாலும் இந்த சாதனை மட்டும் உறுதி; என்ன சாதனை தெரியுமா?
கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது ஐபிஎல் 12 ஆவது சீசன். தினந்தோறும் மாலை கிரிக்கெட் ரசிகர்களை டிவியின் முன்பு அமர வைத்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நாளை மாலை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் குவாலிபயர்-1ல் சென்னையை வீழ்த்தி இறுதிப்போட்டியில் முதல் அணியாய் நுழைந்தது மும்பை அணி. பின்னர் நேற்று நடந்த குவாலிபயர்-2ல் டெல்லியை வீழத்தி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதுவரை நடந்துள்ள ஐபிஎல் தொடர்களில் 7 முறை இறுப்போட்டிக்கு சென்றுள்ள சென்னை அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 4 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள மும்பை அணியும் 3 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதிகமுறை சாம்பியன் பட்டத்தை இந்த இரு அணிகள் தான் வென்றுள்ளன.
இந்நிலையில் 8 ஆவது முறையாக மற்றும் 5 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ள சென்னை மற்றும் மும்பை அணிகள் இந்த ஆண்டுக்கான இறுதிப்போட்டியில் நாளை மோதுகின்றன. இந்த தொடரில் மும்பையுடன் ஆடிய மூன்று போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை தழுவியது.
இதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் போட்டியில் எந்த அணி வென்றாலும் அந்த அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும். எனவே அந்த அணி அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையை படைக்கும் என்பது நிச்சயம்.