அவ்ளோதான் எல்லாம் முடிந்துவிட்டதா.? நேற்றைய ஆட்டத்தின் தோல்வி.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தற்போதைய நிலை.!



delhi-capitals-beats-sun-risers-hyderabad

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் நேற்றய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து  ஐதராபாத் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ரித்திமான் சஹா இருவரும் சொதப்பினார்.

முதல் ஓவரிலேயே வார்னர் டக் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 18 ரன்னிலும், சகா 18 ரன்னிலும், மணிஷ் பாண்டே 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி களம் இறங்கியது. 

Sun risers hyderabad

டெல்லி அணியின் துவக்க வீரர் பிரத்வி ஷா 11 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய தவான் 37 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர்-ரிஷாப் பண்ட் ஜோடி அதிரிடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 17.5 ஓவரில் டெல்லி அணி 139 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.

இதுவரை 8 போட்டிகளில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 7வது தோல்வியை பதிவு செய்தது. இதனால் வெறும் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. இன்னும் ஹைதராபாத் கைவசம் 6 போட்டிகள் மீதமுள்ள நிலையில், இனிவரும் அனைத்து போட்டிகளில் வெற்றிப் பெற்றாலும் அந்த அணி பிளே ஆஃப் முன்னேறுவது கடினமே என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.