தோல்வியோடு போச்சுன்னு பார்த்தால், டெல்லி அணி கேப்டனுக்கு காத்திருந்த மேலும் ஒரு அதிர்ச்சி! என்ன தெரியுமா?
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 13 வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை பதினோரு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ராஜஸ்தான் அணியின் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நேற்று நடந்த 11வது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் ஆரம்பத்திலேயே சொதப்பிய நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதன் மூலம் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதற்கு முன் நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி தனது முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி தாமதமாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.