தலைவன் வேற லெவல்.! ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக.. மாஸ் சாதனை படைத்த தல தோனி!!



dhoni-acheivement-in-ipl-match

ஐபிஎல் 2025 தொடரின் 30வது ஆட்டம் நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது.

தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை குவித்து வெற்றி அடைந்தது. தொடர் தோல்விக்குப் பின்பு கிடைத்த அபார வெற்றியால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

dhoni

இந்த போட்டியில் மகேந்திர சிங் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்த நிலையில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 43 ஆண்டுகள் 281 நாட்கள் வயதான தோனி ஆட்டநாயகன் விருது பெற்ற நிலையில், ஐ.பி.எல் வரலாற்றில் ஆட்டநாயகன் விருதுபெற்ற அதிக வயதான வீரர் என்ற பெருமையும் அவரை அடைந்துள்ளது. 

மேலும் இப்போட்டியில் எம்எஸ் தோனி லக்னோ வீரர் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங்க் செய்து வெளியேற்றியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 Dismissals செய்த முதல் விக்கெட் காப்பாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார். தோனி ஐபிஎல் போட்டிகளில் 155 கேட்சுகள், 46 ஸ்டம்பிங்குகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.