#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோலியை அவுட்டாக்க தோனி போட்ட புது பிளான்.. ஆட்டம் மொத்தமா மாறிப்போச்சு..
சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த நேற்றைய ஐபில் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபில் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து பெங்களூரு அணி பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பெங்களுரு அணி வீரர்கள் கேப்டன் விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கைகை வேகமாக உயர்த்தினர். இந்த கூட்டணி 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த சென்னை அணி வீரர்கள் மிகவும் போராடினர்.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹாரின் ஓவரில் விராட்கோலி சிக்ஸர், பவுண்டரிகளை பறக்கவிட, அப்போதுதான் தோனி அந்த அதிரடி முடிவை எடுத்தார். டெத் ஓவர்களை வீசும் பிராவோவை முன்கூட்டிய பந்துவீச அழைத்தார் தோனி.
அதன் பயனாக விராட் கோலியும், தேவ்தத் படிக்கலும் சற்று தடுமாற ஆரம்பித்தனர். அப்போது ஜடேஜாவும் கை கொடுக்கவே, பெங்களூரு அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை. 53 ரன்கள் அடித்திருந்தநிலையில், பிராவோ வீசிய 14-வது ஓவரில் விராட்கோலி ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின்னர் ஏபி டிவில்லியர்ஸ், தேவ்தத் படிக்கலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, ஆட்டம் சென்னை அணியின் கட்டுக்குள் வந்தது.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட, 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து சென்னை அணி அபார வெற்றிபெற்றது.