வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
#IPL2024 : தோனி ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.!
2024- க்கான ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய முதல் இரண்டு ஆட்டங்களில் சிஎஸ்கே அணி வெற்றியை பதித்தது. அடுத்ததாக டெல்லி அணியுடன் விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே அணி விளையாடியது. டெல்லி அணி 191 ஒரு ரன்கள் பெற்ற நிலையில் சிஎஸ்கே அணி பெரும் 171 ரன்கள் சுருண்டது.
தனது முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி, ருத்ராஜ் தலைமையில் விளையாடிய சிஎஸ்கே அனுப்பி முதல் தோல்வியை பரிசளித்தது. என்னதான் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை பெற்றாலும், 8-வது போட்டியாளராக தோனி களமிறங்கி ஆடிய ஆட்டத்தால் ரசிகர்கள் உச்சி குளிர்ந்தனர்.
வெறும் 16 பந்துகளில், 3 சிக்ஸ், 4 ஃபோர் என விளாசி மொத்தமாக 37 ரன்களை குவித்தார். அவரது அதிரடியான ஆட்டம், சிஎஸ்கே தோல்வியை தழுவ போகிறது என்று சோகத்தில் இருந்த ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் தோனி பல மைல்கல்களைஎட்டினார். சிஎஸ்கே வின் முதல் இரண்டு போட்டிகளில் அவர் கலந்து கொள்ளாமல் மூன்றாவது போட்டியில் தான் கலந்து கொண்டார். அதற்கு காரணம் அவர் கால்களில் ஏற்பட்ட சேதம் காரணமாக சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் போட்டி முடிந்தவுடன் தோனி கால்களில் அடிபட்டதை போல ஐஸ் பேக்குகளை வைத்துக்கொண்டு நடந்து சென்றுள்ளார். இது கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம், வரும் ஏப்ரல் 5-ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சிஎஸ்கே அணிக்கு நான்காவது போட்டி உள்ளது.
A gift for the fans he said! 🥹✨#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/fAIitAsPD7
— Chennai Super Kings (@ChennaiIPL) April 1, 2024
காயம் காரணமாக தோனி இந்த ஆட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தோனி இல்லாத சிஎஸ்கே அணியை ரசிகர்கள் மிகவும் மிஸ் பண்ணுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் அடுத்த போட்டியிலும் அவர் இருக்க மாட்டார் என்ற தகவல் அவர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.