மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓய்வினை அறிவித்தவுடன் தோனி இப்படி தான் இருந்தார்.. மெய்சிலிர்க்கும் பாலாஜி!
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமிபதி பாலாஜி. இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன் தற்போது துபாய் சென்றுள்ள பாலாஜி, தோனி ஓய்வினை அறிவித்த பிறகு எப்படி நடந்துகொண்டார் என்பதை மிகவும் பிரமிப்புடன் பிரதிபலித்துள்ளார். தோனி ஓய்வினை அறிவித்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
தோனி ஓய்வினை அறிவித்ததும் அடுத்த கனமே பாலாஜியிடம் வந்து பிட்ச்சில் தண்ணீர் விட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். தோனி ஓய்வினை அறிவித்த தகவல் அப்போது பாலாஜிக்கு தெரியவில்லை.
அதன் பின்னர் தோனியின் ஓய்வு குறித்த செய்தி கேட்ட பாலாஜி, வாழ்வில் முக்கியமான தருணத்திலும் எவ்வளவு கூலாக தோனி இருக்கிறார் என நினைத்து பூரிப்படைந்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டிலேயே இந்த நூற்றாண்டில் இத்தகைய வீரரை காண்பது அரிது என்றும் தெரிவித்துள்ளார்.