தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தோனி ரிவியூவ் சிஸ்டம்..!!: டி.ஆர்.எஸ் முறைக்கு புதிய அர்த்தத்தில் டிரெண்டிங் செய்த ரசிகர்கள்..!!
கடந்த 2008 ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல் டி-20 தொடர் 15 வருடங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16 வது சீசனில், இதுவரை 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடபெற்ற 12 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து மும்பை அணிக்கு ரோகித் சர்மா-இஷான் கிஷன் ஜோடி களமிறங்கியது . தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடி காட்டினர். ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுபுறம் சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 32 ரன்களுக்கு ஆட்டமிழக்க , அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் இருந்த போது சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் லெக்சைடில் வைடாக வீசிய பந்தை அடிக்க முயற்சித்தார். அதனை மின்னல் வேகத்தில் கேட்ச் செய்த தோனியும், பந்துவீசிய மிட்செல் சான்ட்னரும் அவுட் கேட்டு நடுவரிடம் முறையீடு செய்தனர்.
அதற்கு அவுட் கொடுக்காத நிலையில், தோனி அடுத்த நொடியே டி.ஆர்.எஸ் முறையில் ரிவியூவ் கேட்டு அப்பீல் செய்தார். தோனி ரிவியூ கேட்டதை பார்த்த சூர்யகுமார் யாதவ், ரிவியூவ் முடிவு வரும்வரை காத்திராமல் ஆடுகளத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.
3 வது நடுவர் ரிவியூவ் செய்ததில் அந்த பந்து சூர்யகுமார் யாதவின் பேட்டில் உரசியபடி செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நடுவரின் முடிவு திரும்ப பெறப்பட்டு அவுட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், டி.ஆர்.எஸ் என்றால் தோனி ரிவியூவ் சிஸ்டம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Dhoni Review System™️ for a reason 😎#MIvCSK #TATAIPL #IPLonJioCinema pic.twitter.com/CkhN6bp61H
— JioCinema (@JioCinema) April 8, 2023
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.