மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தோனியின் பேட்டை பறக்கவிட்ட பும்ரா! ஒரே பந்தில் நடந்த பல சுவாரஸ்யங்கள்
நேற்று சென்னையில் நடந்த குவாலிபயர்-1 போட்டியில் மும்பை அணி சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் மும்பை அணி முதல் அணியாக 12 ஆவது ஐபிஎல் சீசனில் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் துவக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. முரளி விஜய் மற்றும் அம்பத்தி ராயுடு மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். முரளி விஜய் 13 ஆவது ஓவரில் அவுட்டாக தோனி களமிறங்கினார்.
அடுத்து 7 ஓவர்கள் களத்தில் நின்ற தோனியால் 29 பந்துகளை சந்தித்து 3 சிக்சர்கள் விளாசி 37 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 19 ஆவது ஓவரில் மலிங்கா பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிகசர்களை விளாசினார்.
ஆனால் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் பும்ராவின் பந்தை தோனியால் சரியாக அடிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் ஒரு நோபால், ப்ரீ ஹிட் கிடைத்தும் தோனி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.
கடைசி ஓவரின் முதல் பந்தினை பும்ரா நல்ல வேகத்தில் புல் டாஸாக வீசினார். அதனை மடக்கி அடிக்க முயன்ற தோனியின் பேட் கையிலிருந்து உருவி காற்றில் பறந்தது. ஆப் சைடில் எழும்பி வந்த பந்தினை பாயிண்ட் திசையில் நின்ற இஷான் கிஷான் சிறப்பாக கேட்ச் பிடித்தார். தோனி அவுட்டாகிவிட்டார் என ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
ஆனால் பும்ரா வழக்கமாக முக்கியமான தருணங்களில் செய்யும் தவறினை நேற்றும் செய்தார். அந்த பந்தினை மீண்டும் ரீப்ளே செய்து பார்த்ததில் தோனி அவுட்டான பந்து நோபால் என தெரிந்தது.
அதனைத் தொடர்ந்து தோனி மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்தார். ஆனால் பும்ரா அடுத்தடுத்த பந்துகளை மிகவும் நேர்த்தியாக வீசவே தோனியால் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை குவிக்க முடியவில்லை.