மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நேற்றைய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் செய்த காரியம்! பிரமித்துப்போன ரசிகர்கள்!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவு பெற்றுள்ள நிலையில் மும்பை அணி முதல் இடத்தையும், சென்னை அணி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. டெல்லி மற்றும் கைதராபாத் அணிகள் மூன்று மட்டும் நான்காவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
வெற்றிபெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கனவுடன் நேற்றைய போட்டியில் மும்பையுடன் விளையாடிய கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது. இதன்மூலம் வெற்றிபெற்று மும்பை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை தட்டி சென்றது.
நேற்றை ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 137 ரன் எடுத்தது. 138 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 17 வது ஓவரில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் 7 வது ஓவரில் மும்பை அணி வீரர் டீகாக்கை கேட்ச் பிடித்து வெளியேற்றினர் தினேஷ் கார்த்திக்.
பிரசித் கிருஷ்ணா வீசிய பவுன்சர் பந்தை டீகாக் அடிக்க முறைப்பட போது பந்து பின்புறம் உயரத்தில் சென்றது. கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அதிவேகமாக ஒடி பந்தினை அபாரமாக கேட்ச் பிடித்தார். தினேஷ் கார்த்திக்கின் இந்த அதிவேக ஓட்டத்தை பார்த்த ரசிகர்கள் பிரமித்த போய் நின்றனர்.