மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை டெஸ்ட்: நங்கூரமாய் நிற்கும் சிப்லி, ரூட்.. விழிபிதுங்கும் இந்திய பந்துவீச்சாளர்கள்!
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் நியூசிலாந்து மோதப்போகும் எதிரணி என்பதை தீர்மானிக்கும் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பரபரப்பான டெஸ்ட் தொடர் இன்று சென்னையில் துவங்கியது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான சிப்லி மற்றும் பர்ன்ஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மதிய உணவு இடைவேளை நெருங்கும் நேரத்தில் இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை அஸ்வின் பெற்று தந்தார். பர்ன்ஸ் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய லாரன்ஸ் பும்ரா பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். உணவு இடைவெளியின் போது இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. மூன்றாவது விக்கெட்டிற்கு சிப்லியுடன் இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை மிகவும் நேர்த்தியாக எதிர்கொண்டு வருகின்றனர்.
தேனீர் இடைவெளியையும் கடந்து பேட்டிங் செய்து வரும் இருவரும் அரைசதத்தை கடந்துள்ளனர். மேலும் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேலாக எடுத்துள்ளனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர். 68 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளனர். சிப்லி 64, ரூட் 70 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.