மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேருதான் ஒல்லி, ஆக்சன் கில்லிடா... இந்தியாவை தெறிக்கவிட்ட இங்கிலாந்து கிரிக்கெட்டர்.! ஆட்டநாயகனாக தேர்வு.!
5 டெஸ்ட் தொடர்கள் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் முதல் ஆட்டம் ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் ஜனவரி 25 முதல் தொடங்கி இன்று நிறைவுபெற்றது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்கள் குவித்து அவுட்டாக, இந்தியா 426 ரன்கள் குவித்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 420 ரன்கள் குவித்தது.
இந்தியா முதல் இன்னிங்சில் 420 ரன்கள் குவிந்ததால், எஞ்சிய 231 ரன்களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொடக்கத்தில் இந்தியா அடித்து ஆடுவது போல தோன்றினாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இந்திய அணியின் இன்றைய சொதப்பல் ஆட்டம், முதல் வெற்றி இந்திய மண்ணில் இந்தியாவின் கைகளை நழுவிப்போனது. ஆட்டத்தின் இறுதியில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில், ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் (Ollie Pope) பெற்றார். இவர் இரண்டாவது இன்னிங்சில் 278 பந்துகளில் 196 ரன்கள் அடித்து விளாசி இருந்தார். சிக்ஸர் ஏதும் அடிக்காமல் 21 பவுண்டரிகள் எடுத்து இருந்தார். இவரது ரன் முதல் இன்னிங்சில் ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் சேர்ந்து எடுத்த ரன்னை விட 23 ரன்கள் அதிகம் ஆகும். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சரியாக விளையாடவில்லை.