#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தலையில் அடிபட்டதில் சென்னை அணி வீரர் டுப்ளஸிக்கு மெம்மரி லாஸ்?? அவரின் தற்போதைய நிலை என்ன?? வெளியான தகவல்..
பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் காயமடைந்த தென்னாபிரிக்க அணி வீரர் டூப்ளசிஸ் மருத்துவமனையில் இருந்து விடுதிக்கு திரும்பியுள்ளார்.
அபதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின்போது எதிரணி வீரர் டேவிட் மில்லர் அடித்த பந்தை தடுப்பதற்காக தென்னாபிரிக்க அணி வீரர் டூப்ளசிஸ் ஓடிய போது எதிரே ஓடிவந்த சக வீரர் முகமது ஹஸ்னைன் மீது வேகமாக மோதினார்.
Praying to Almighty for the speedy recovery and a good health for #FafduPlessis
— An Indian 🇮🇳💎 (@real_farooque07) June 12, 2021
May he #getwellsoon ! pic.twitter.com/TT1JaTGFCH
இதில் டூப்ளசிஸ் தலை மற்றும் கழுத்து பகுதி பலத்த அடிபட்டு அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் தற்போது சிகிச்சை முடிந்து தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு திரும்பிவிட்டதாக ட்விட் செய்துள்ளார்.
மேலும், "எனக்கு ஆதரவாக வாழ்த்தி செய்தி அனுப்பிய அனைவர்க்கும் நன்றி. நான் மீண்டு வருகிறேன். அடிபட்டதால் மூலையில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. ஆனால் நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் களத்தில் இறங்குவேன் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
டூப்ளசிஸ் ஐபில் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிவருகிறார். சமீபத்தில் நடந்த ஐபில் தொடரில் டூப்ளசிஸ் சென்னை அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை பல போட்டிங்களில் வெற்றிபெற செய்துள்ளார்.
கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ஐபில் போட்டிகள் விரைவில் துபாயில் தொடங்க இருக்கும் நிலையில், டூப்ளசிஸ் அடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் சென்னை அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Thank you everyone for all the messages of support. I'm back at the hotel recovering. Have concussion with some memory loss but I will be fine. Hopefully be back on the field soon. Much love. ❤️
— Faf Du Plessis (@faf1307) June 13, 2021