மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் பங்குபெற அனுமதி.! குஷியில் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள்.!
இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 5 முதல் 9-ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன.
3-ஆவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளன.
சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முதன்முறையாக இந்தியா - இங்கிலாந்து இடையே நடைபெறுகிற இந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் பங்குபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்களாக பங்குபெற, கடந்த 8-ஆம் தேதி ஆன்லைனில் புக்கிங் செய்தவர்கள் இன்றுமுதல் டிக்கெட்டை கவுண்டர்களில் டிக்கெட் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.