திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விராட் கோலியின் 100வது டெஸ்டில் திடீர் மாற்றம்.! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்.!
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த T20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.
வரும் 4-ஆம் தேதி நடக்கவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என பிசிசிஐ முன்னதாக அறிவித்திருந்தது.
ஆனால் இது விராட் கோலிக்கு எதிரான சதிச் செயல் என ரசிகர்கள் விமர்சித்திருந்தனர். மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கரும், 100வது டெஸ்ட் என்பது மிகவும் முக்கியமான தருணம். இதற்கு ரசிகர்களை அனுமதித்து, அதனை பெரிதளவில் கொண்டாட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதனை பரிசீலினை செய்த பிசிசிஐ 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்று முடிவு எடுத்துள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை