#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோல்வியால் உருகிய KXIP உரிமையாளர் நடிகை ப்ரீத்தி சிந்தா... ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் மிகவும் வலிமையான அணியாக தோன்றியது. ஆரம்பத்தில் தொடர் தோல்விகளை சந்தித்த போதிலும் இரண்டாவது பாதியில் தொடர்ந்து 5 போட்டிகளில் வென்று ஆச்சரியப்படுத்தியது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகளால் அந்த ஆனால் பிலே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த அணியின் ஒரு உரிமையாளரான நடிகை சிந்தா, "IPL மற்றும் துபாய்க்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் இது. நாங்கள் எதிர்பார்த்தது போல் இந்த தொடர் எங்களுக்கு அமையவில்லை. அடுத்த சீசனில் இதை விட சிறப்பான வலிமையான அணியாக துணிச்சலுடன் வருவோம். இந்த தொடரில் மறக்க முடியாத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின.
நாங்கள் தோற்றாலும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த ரசிகர்களுக்கு மிகுந்த நன்றி என கூறியுள்ளதோடு ரசிகர்கள் தான் எங்களின் மூச்சு என்றும் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்து வரும் ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் மற்றும் நம்பிக்கை அளிக்கும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.
Time to say goodbye to #IPL & Dubai. Not the season we hoped for but we will come back bigger,better & stronger👊So many thrills, heart attacks,highs,lows & memorable moments. It’s been a shorter run than what we hoped for (1/2) pic.twitter.com/etnbBTU9x9
— Preity G Zinta (@realpreityzinta) November 3, 2020