96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இந்திய அணியில் அந்த வீரரிடம் கவனமாக இருங்கள்! நியூசிலாந்து அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!
கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக மிகப்பெரும் விருந்தாக அமைந்திருந்தது உலக்கோப்பை கிரிக்கெட் தொடர். தற்போது இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நிச்சயம் நியூசிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற கனவோடு இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் இன்று நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மான்செஸ்டர் மைதானத்தில் மோதவுள்ளன. இந்நிலையில் நியூஸிலாந்து அணி வீரர்களுக்கு முன்னாள் கேப்டன் வெட்டோரி பல அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் பும்ரா. இவர் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி நல்ல பார்மில் உள்ளார். அவரது பந்து வீச்சு கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. அதனால் அவரின் பந்து வீச்சை நியூசிலாந்து வீரர்கள் கவனமாக எதிர்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அது போல கடைசி ஓவர்களில் ஷமி சிறப்பாக செயல்படுகிறார். மேலும் ஹர்திக் பாண்டியா, ரிஷப்பந்த் ஆகியோர் சுழற்பந்துவீச்சை கையாளும் விதம் அபாயகரமாக இருக்கிறது. இந்திய அணியில் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு பணியை சிறப்பாகச் செய்கிறார்கள்.
இந்திய அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணி அதிக ரன்களை எடுத்தால் மட்டுமே இந்திய அணியை கட்டுப்படுத்த முடியும். இந்திய அணியின் துவக்க வீரர்களை விரைவில் வெளியேற்ற நியூஸிலாந்து அணி வீரர்கள் முயற்சி செய்ய வேண்டும். ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்தாவிட்டால் நியூஸிலாந்து அணிக்கு அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
கேன் வில்லியம்ஸனுக்கு இந்திய வீரர்களின் பலவீனம், பலம் தெரியும். எனவே அதற்கு ஏற்றார்போல் திட்டமிட்டு, வீரர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என வெட்டோரி கூறியுள்ளார்.