திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
டிராவில் முடிந்தது நான்காவது டெஸ்ட்! ஆஸ்திரேலியாவில் தொடரை வென்று இந்தியா சாதனை
சிட்னியில் நடைபெற்று வந்த இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதன்மூலம் இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே 2-1 என்று தொடரில் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடரை வென்றது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் மற்றும் முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை கோலி தட்டிச் சென்றார்.
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்று செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து நேற்று டிக்ளேர் செய்தது. புஜாரா 193, பண்ட் 159, ஜடேஜா 81, விஹாரி 77 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி நான்காவது நாள் இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்களை எடுத்தது. பாலோவ் ஆன் ஆன ஆஸ்திரேலியா அணியை மீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆடுமாறு இந்தியா அழைத்தது. ஆனால் நான்காவது நாள் கடைசியில் குறுக்கிட்ட மழையால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும் சாமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஐந்தாவது நாள் ஆட்டம் முழுவதுமாக நடைபெற்றால் இந்திய அணியால் ஆஸ்திரேலிய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் இன்று மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நடைபெறவில்லை. எனது இந்த போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் ஏற்கனவே இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. எனவே 2-1 என்று தொடரில் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடரை வென்றது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் மற்றும் முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையை கோலி தட்டிச் சென்றார்.
கடைசி போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் நான்கு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருதையும் இந்திய அணியின் புஜாரா தட்டிச்சென்றார்.