96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா எதிரொலியால் ஐபிஎல் 2020 தொடருக்கு சிக்கலா.. கங்குலி கருத்து!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2020 தொடரானது வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை யூஏஇ-யில் நடைபெறவுள்ளது. இதற்கான அணி வீரர்கள் யூஏஇக்கு சென்றுவிட்டனர்.
துபாயில் வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் மற்றும் பேட்ஸ்மேன் ருத்ராஜ் ஹேக்வாட் உட்பட சென்னை அணியில் பணிபுரியும் மொத்தம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்த 12 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவும் தொடரை விட்டு விலகியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகுந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் ஐபிஎல் தொடர் நடைபெறுவதில் எந்த சிக்கலும் கிடையாது. இந்த ஐபிஎல் தொடர் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.