மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோலியின் அணுகுமுறை வேஸ்ட்.. இதுதான் இப்போ ட்ரெண்ட்.. ரோகித் சர்மாவின் திட்டத்தை புட்டு புட்டு வைத்த ஹார்டிக் பாண்டியா..!
கோலியின் தலைமையில் கடந்த 5, 6 ஆண்டுகளாக டி20 போட்டிகளில் இந்திய அணி கடைபிடித்த அணுகுமுறை வேண்டாம். நாம் புதிய யுக்திகளை கையில் எடுப்போம் என ரோகித் சர்மா முடிவு செய்துவிட்டதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஆசியா கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற உள்ளதால் சரியான இந்திய அணியை தேர்வு செய்யும் முனைப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் சுழற்சி முறையில் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்தியாவின் பேட்டிங் முறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை காணமுடிகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் கையாளும் புதிய அணுகுமுறைகள், வீரர்களுக்கு அவர்கள் கொடுக்கும் சுதந்திரம் மற்றும் வாய்ப்புகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
அப்போது "வீரர்களிடம் ரோகித் சர்மா பேசும்பொழுது 5, 6 வருடங்களாக நாம் பின்பற்றியவைகளை மறந்துவிட்டு புதிய அணுகுமுறைகளை கையாளுவோம் என கூறுகிறார். இதன் விளைவுதான் சமீப காலமாக இந்திய அணியின் பேட்டிங்கில் அசுர வேகத்தை காணமுடிகிறது. வீரர்களை நன்கு புரிந்துகொள்ளும் தன்மை கொண்ட ரோகித் சர்மா வீரர்களுக்கான சுதந்திரத்தையும் பாதுகாப்பு உணர்வினையும் உருவாக்குகிறார். எந்த ஒரு வீரர் மீதும் சுமையை ஏற்ற அவர் விரும்பவில்லை.
அனைத்து வீரர்களுக்கும் போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என ரோகித் மற்றும் ட்ராவிட் முடிவு செய்து செயல்படுகின்றனர். அதேசமயம் ஒவ்வொரு முறை வாய்ப்பு அளிக்கும் போதும் சரியாக விளையாடாவிட்டால் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள் எனவும் கண்டிப்புடன் கூறுகின்றனர். இந்த அணுகுமுறை வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது.
ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் இமாலய இலக்கை நோக்கியே அதிரடியாக விளையாட வேண்டுமென்பதே அணியின் புதிய அணுகுமுறையாக உள்ளது. உலக கோப்பை தொடரை கருத்தில்கொண்டு இந்த புதிய அணுகுமுறையை இப்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம்" என ஹார்டிக் பாண்டியா கூறியுள்ளார்.