மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த கேப்டனாக அடித்தளம் போடுகிறாரா பாண்டியா.. தொடர் முடிந்த கையோடு என்ன செய்துள்ளார் பாருங்கள்..!
காயம் காரணமாக நீண்ட நாட்கள் ஓய்வில் இருந்த ஹார்டிக் பாண்டியா நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக பொறுப்பேற்று சாம்பியன் பட்டத்தை பெற்று தந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச தொடர்களிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என தனது திறமையை நிரூபித்து இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா 2 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடினார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 ஆவது டி20 போட்டியிலும கேப்டன் பொறுப்பை ஏற்ற ஹார்திக் பாண்டியா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அந்த ஆட்டத்தின் முடிவில் பேசிய ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது பெருமையாக உள்ளது என தெரிவித்தார். மேலும் இந்திய அணிக்கு நிரந்தர கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்கத் தயார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் கனவு ஹார்டிக் பாண்டியாவின் மனதில் உதித்துள்ளது உறுதியாகிவிட்டது. இந்தத் தருணத்தில் ஹார்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
— hardik pandya (@hardikpandya7) August 8, 2022