மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மே ஐ கம் இன்...! மரணமாஸ் எண்ட்ரி கொடுத்து தரமான சம்பவம் செய்த ஹர்த்திக் பாண்டியா.!
பாண்டியா தனது அறுவை சிகிக்கைக்குப் பிறகு விளையாடிய இரண்டாவது போட்டியில், 105 ரன்களைக் குவித்தது மட்டுமல்லாமல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்திய அணையில் கடந்த உலககோப்பையில் பெரிய அளவிற்கு எதிர்பார்த்த ஆள் தான் ஹர்த்திக் பாண்டியா. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. 5 மாதங்களுக்கு முன்பு காயமடைந்த ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை, அதன் பிறகான மீட்பு சிகிச்சை ஆகியவற்றை முடித்து மீண்டும் உடற்தகுதி பெற்று இந்திய அணியின் தேர்வுக்குத் தயாராகி யுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
37 ball 💯 For @hardikpandya7 #DYPATILT20
— Sharique (@Jerseyno93) March 3, 2020
🔥🔥🔥
7 fours And 10 Sixes #HardikPandya pic.twitter.com/nWSAugNVHa
7 மாதங்களுக்கு மேலாக காயத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்து, தற்போது நவி மும்பையில் நடந்த டி 20 கோப்பையில் வெறும் 39 பந்துகளில் 105 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார். 39 பந்தில 7 பவுண்டரி, 10 சிக்ஸர் அடித்து 105 ரன்கள் எடுத்தது மட்டும் இல்லாமல் பவுலிங்ல 5 விக்கெட் வீழ்த்தி தரமான சம்பவம் செய்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் ஒரே ஓவரில் 6,0,6,6,4,4 என பந்துகளை பறக்கவிட்டு பழைய ஹர்த்திக் பாண்டியாவாக வந்து அசத்தியுள்ளார். 26 வயதான இவர், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இந்தநிலையில் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ) பந்துவீச்சு பயிற்சியைத் தொடங்கினார்.