மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ட்விட்டரில் தோனியை குறித்து பதிவிட்ட ஹார்டிக் பாண்டியா! வைரலாகும் ட்வீட்
நடந்து வரும் ஐபிஎல் 12 ஆவது சீசனின் குவாலிபயர்-1 போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மும்பை மற்றும் சென்னை அணிகள் இதில் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த சீசனில் மும்பை அணியின் வெற்றிகளுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா.
இந்திய அணியிலும் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியம் என்பது அனைவயுக்கும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அடுத்து இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் ஹார்டிக் பாண்டியா தனது அதிரடியால் இந்திய அணிக்கு வெற்றிகளை குவிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சென்னை அணிக்கு எதிராக நேற்று வெற்றிப்பெற்றதை அடுத்து தோனியை குறித்து ஹார்டிக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தோனியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். எதிரணி வீரர்களை கூட எளிதில் கவரும் தன்மை கொண்டவர் தோனி.
இந்நிலையில் நேற்று எதிரணியில் ஆடிய ஹார்டிக் பாண்டியா, தோனியை குறித்து: "தோனி என்னுடைய உத்வேகம், என் நண்பர், என் சகோதரர், என் சாதனையாளர்" புகழந்து தள்ளியுள்ளார்.
My inspiration, my friend, my brother, my legend ❤🚁 @msdhoni pic.twitter.com/yBu0HEiPJw
— hardik pandya (@hardikpandya7) May 8, 2019