நண்பர்கள் தினத்தை ஜல்லிக்கட்டுடன் ஒப்பிட்ட ஹர்பஜன் சிங்! தமிழில் வாழ்த்து கூறி அசத்தல்!!



harpajan-friendship-day-wishes

 
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சமூகவலைத்தளங்களில் அனைவரும் நண்பர்கள் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய அணைத்து கிரிக்கெட் வீரர்களும் தமிழில் பேசுவதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். இந்தநிலையில் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், நண்பர்கள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



 

ஹர்பஜன் அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘நம் நண்பர்களை போல இந்த உலகத்துல பெரிய வரம் எதும் இல்லங்க. ஜல்லிக்கட்டு சம்பவமும், சங்கமமும் நட்பால் தானே சாத்தியம் ஆச்சு.

கும்பலா சுத்துனாலும், ஐயோ யம்மான்னு கத்தினாலும் எல்லாம் நட்பு தான், நட்பும் மச்சானும் துணை. Wishing all my dear Friends' என தெரிவித்துள்ளார்.