சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
அம்பயர்களின் முடிவை விமர்சிப்பது முறையல்ல - ஓவர்த்ரோ சர்ச்சைக்கு ஐசிசி முற்றுப்புள்ளி
நடந்து முடிந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறின. அதில் மிகவும் முக்கியமானது கடைசி ஓவரில் வீசப்பட்ட ஓவர்த்ரோவ்.
கடைசி 3 பந்துகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 9 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரின் நான்காவது பந்தினை பென் ஸ்டோக்ஸ் லெக் திசையில் தட்டிவிட்டு 2 ரன்கள் ஓட முயன்றார். அப்போது கப்டில் எடுத்து வீசிய பந்து ஸ்டோக்சின் பேட்டில் பட்டு எல்லைக் கோட்டை கடந்தது.
அப்போது களத்தில் இருந்த அம்பயர்கள் இங்கிலாந்து அணிக்கு 6 ரன்கள் அளித்தனர். ஆனால் உண்மையில் ஐசிசி விதிகளின்படி 5 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுத்திருந்தால் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக ஐந்தாவது பந்தை ரசீது சந்தித்திருப்பார். நியூசிலாந்து வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் களத்தில் இருந்த அம்பயர்களான குமார் தர்மசேனா மற்றும் மரியாஸ் எராஸ்மஸ் தவறு செய்துவிட்டதாக ஐசிசி முன்னாள் நடுவர் சைமன் டஃபுல் விளக்கமளித்துள்ளார்.
ஐந்து ஆண்டுகள் சிறந்த நடுவர் விருதை பெற்ற சைமன் டஃபுல் கூறியுள்ள விளக்கத்தில், " ஐசிசி விதிமுறை 19.8ன் படி பீல்டர் பந்தினை வீசுவதற்கு முன்பே இரண்டு பேட்ஸ்மேன்களும் ஒருவரையொருவர் கடந்திருந்தால் மட்டுமே ஓவர்த்ரோவிற்கு பிறகு எடுக்கப்பட்ட ரன்களோடு ஒரு ரன் சேர்க்க வேண்டும். ஆனால் இறுதிப்போட்டியில் கப்டில் பந்தினை வீசும்பொழுது ஸ்டோக்ஸ் மற்றும் ரசீது இருவரும் க்ராஸ் செய்யவில்லை. எனவே பவுண்டரியுடன் சேர்த்து 5 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்க வேண்டும்" என விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஐசிசியின் செய்தி தொடர்பாளர், "அம்பயர்கள் களத்தில் நடக்கும் நிகழ்வுகளை பொறுத்து ஐசிசி விதிமுறைப்படி தான் முடிவுகளை அறிவிக்கின்றனர். மேலும் விதிமுறையில் உள்ளவாரே அம்பயர்களின் எந்த முடிவுகளையும் குறித்து நாம் எந்த விமர்சனங்களும் செய்யக் கூடாது" என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.