3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
சற்றுமுன் வெளியான ஒருநாள் தரவரிசை! இந்திய அணி எத்தனையாவது இடம் தெரியுமா?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி கடந்த வாரம் முடிவடைந்தது. தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிவந்த இந்திய அணி முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் தோல்வியடைந்து நாடு திரும்பியது. இறுதியில் நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
இந்நிலையில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையை ICC வெளியிட்டுள்ளது. அதில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 123 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. நியூசிலாந்து அணி 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
112 , 110 , 97 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளது. 90 புள்ளிகளுடன் வங்கதேச அணி ஏழாவது இடத்திலும், 79 புள்ளிகளுடன் இலங்கை அணி 8 வது இடத்தில் உள்ளது. 77 , 59 புள்ளிகளுடன் 9 மற்றும் 10 வது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் உள்ளது.