#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி! முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா? முழுவிவரம் உள்ளே!
தற்காலத்தில் உலகளவில் அனைவராலும் ஆர்வத்துடன் ரசிக்கப்படும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. மேலும் அதில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களின் ஆட்டத்தை பொறுத்தும், ஐசிசி நிர்வாகம் அவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடும்.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் ஐசிசி டெஸ்ட் போட்டிகளை அடிப்படையாக கொண்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்த ஸ்மித் 923 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார். இந்திய கேப்டன் கோலி 928 புள்ளிகளை பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரை தொடர்ந்து வில்லியம்சன், புஜாரா,வார்னர், ரஹானே ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் (பேட்டிங்)
1) கோலி – 928
2) ஸ்மித் – 923
3) வில்லியம்சன் – 877
4) புஜாரா – 791
5) வார்னர் -764
6) ரஹானே – 759
7) ரூட்- 752
8) லபுஸ்சக்னே – 731
9) நிக்கோல்ஸ் – 726
10) கருணரத்னே – 723
மேலும் பந்துவீச்சில் 900 புள்ளிகளை பெற்று ஆஸ்திரேலியா வீரர் கம்மின்ஸ் முதலிடத்தையும், ரபடா 839 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும், அவர்களை தொடர்ந்து ஹோல்டர், வாக்னர், பும்ரா ஆகியோரும் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.
பந்துவீச்சு:
1) கம்மின்ஸ் ( ஆஸ்திரேலியா)- 900 புள்ளிகள்
2) ரபடா (தென்னாப்பிரிக்கா) - 839
3) ஹோல்டர்(வெஸ்ட் இண்டீஸ்)- 830
4) வாக்னர் ( நியூசிலாந்து) - 814
5) பும்ரா( இந்தியா)- 794
6) பிலாந்தர்(தென்னாப்பிரிக்கா) - 783
7) ஆண்டர்சன் ( இங்கிலாந்து)- 782
8) ஹஸ்ல்வுட்( ஆஸ்திரேலியா) - 776
9) அஷ்வின்( இந்தியா) - 772
10) முகமது ஷமி( இந்தியா) - 771