#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: ஆஸி., க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது.. பயங்கர சொதப்பல் ஆட்டம்.!
ஆஸ்திரேலிய நாட்டில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி, இன்று தொடங்கியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி சொதப்பல்
முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டும் எடுத்த இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்த விக்கெட்டை இழந்தது. அணியின் சார்பில் விளையாடிய நிதிஷ் ரெட்டி 41 ரன்கள், ரிஷப் 37 ரன்கள் அதிகபட்சமாக எடுத்துள்ளனர்.
50 ஓவருக்குள் முடிந்த ஆட்டம்
தொடக்க ஆட்டக்காரர்களான படிக்கல், ஜெய்ஷ்வால் ஆகியோர் ரன்கள் ஏதும் எடுக்கலாம் தோல்வி அடைந்தனர். 50 ஓவர் நெருங்குவதற்குள் (49.4 ஓவர்) இந்திய அணி மொத்த விக்கெட்டையும் இழந்து இருக்கிறது.
ஆஸி., அணியின் பந்துவீச்சு அபாரம்
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரில், இந்தியா சொந்த மண்ணில் மிக மோசமான சாதனை படைத்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து இருக்கிறது.
ஆஸி., அணியின் சார்பில் பந்து வீசியவர்களில் ஜோஷ் 4 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். மிட்செல் மார்ஸ், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஆகியோர் தலா 2 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.