இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி; அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி.!



IND Vs AUS Test Series 2024 Nitish Kumar Reddy Century 

 

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் கவாஸ்கர் ட்ராபி போட்டியில், இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. 5 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி அடைந்துள்ளது. 

இந்திய அணி 358 ரன்கள் குவிப்பு

நான்காவது ஆட்டம் டிச.26 முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 122.4 ஓவர் முடிவில் 474 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி 116 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வசம் நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ் விக்கெட் கைவசம் இருக்கிறது. 

நிதிஷ் அதிரடி

நிதிஷ் குமார் ரெட்டி இன்றைய ஆட்டத்தில் தனது அபார பங்களிப்பை வெளிப்படுத்தி 176 பந்துகளில் 105 ரன்கள் அடித்து அசத்தினார். இன்றைய நாளின் ஆட்டம் முடிந்தபின், நாளை காலை இந்திய நேரப்படி அதிகாலை 5 மணியளவில் ஆஸ்திரேலியாவில் ஆட்டம் தொடங்கும். 

நான்காவது போட்டியில் இந்தியா விடாமுயற்சி முனைப்புடன் விளையாடி வெற்றியை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதிஷ் குமார் ரெட்டியின் ஆட்டமும் வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், இந்திய அணி ஆஸி., அணியை விட 158 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.