மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வெற்றி யாருக்கு?.. அசத்தல் ஜோதிட கணிப்பு இதோ.!
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இறுதிப்போட்டி, குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நாளை (19 நவம்பர் 2023) அன்று நடைபெறுகிறது.
இந்த போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க பிசிசிஐ மற்றும் ஐசிசி பல முன்னேற்பாடுகளை செய்துள்ளன. போட்டியில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதுகின்றன.
நாளை மதியம் 12:30 மணிக்கு மேல் கிரிக்கெட் மைதானத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கி, 2 மணிக்கு மேல் ஆட்டம் நடைபெறுகிறது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை சேர்ந்தோர் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் குஜராத் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா வெற்றிபெறும் என ஜோதிடம் கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மேஷத்தில் இருந்து வக்கிரம் பெற்று மீனத்தை நோக்கி பயணிக்கும் குரு, கேது - சுக்கிரனின் கன்னி இருப்பு, செவ்வாய் ஆட்சி பெரும் விருச்சிகத்தில் நிலவும் சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரக அமைப்புகளால் இந்தியாவே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.