BP எகிறிடுச்சு..!! கடைசி ஓவரில் மல்லுக்கட்டிய நடராஜன்.. விடாமல் போராடிய சாம் கரண்.. இந்தியா த்ரில் வெற்றி..



Ind vs Eng 3rd odi last minutes thrilling

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி வழக்கம்போல் பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி 48.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பாக பண்ட் அதிகபட்சமாக 78 ரன்களும், தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களும் அடித்தனர்.

natarajan

இதனை தொடர்ந்து 330 என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கத்திலையே அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சாம் கரண் மட்டும் நிதானமாக ஆடி அணியை வெற்றியின் விளிம்புவரை அழைத்துச்சென்றார். எட்டு விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்த போதும், எந்தவித பதட்டமும் இல்லாமல், சாம் குர்ரான் சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உருவானது, இந்நிலையியல் கடைசி ஓவரில் 6 பந்துக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில் தமிழக வீரர் நடராஜன் பந்து வீச வந்தார். கடைசி ஓவரின் முதல் பந்திலையே மார்க் வுட் ரன் அவுட் ஆக, 5 பந்துகளில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

அதேநேரம் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த சாம் கரனுக்கும் ஒரு பயம் ஏற்பட்டது. இறுதியில் மீதமிருந்த 5 பந்துகளை சிறப்பாக வீசிய நடராஜன் கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த நிலையில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

தனி ஆளாக போராடி அணியை வெற்றியின் விளிம்புவரை அழைத்துச்சென்ற சாம் கரனுக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். அதேநேரம் இக்கட்டான கடைசி ஓவரை கச்சிதமாக வீசிய நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.