மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 போட்டி: 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 102 ரன்கள் குவிப்பு..!
இந்தியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச தீர்மானித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடுகிறது. போட்டி அட்டவணையின் படி இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், இஷான் கிஷன்-ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி இந்திய அணியின் இன்னிங்சை துவங்கியது.
பவர் பிளே வரை விக்கெட்டை இழக்காத இந்திய அணி 6.2 ஓவரில் 57 ரன்கள் எடுத்திருந்த போது முதல் விக்கெட்டை பறி கொடுத்தது. துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 15 பந்துகளில் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனுடன் இணைந்து அதிரடியாக விளையாடி வருகிறார். 10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் குவித்துள்ளது.
இரு அணி வீரர்கள் விபரம்;-
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கே), ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், டுவைன் ஃப்ரிட்டோரியஸ், கேஷவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே
இந்தியா: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கே), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுவேந்திர சஹல், ஆவேஷ் கான்