மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
IND vs AUS || சென்னையில் ஒருநாள் போட்டி!!,, வாங்க, வாங்க, வாங்க டிக்கெட் வாங்க சீக்கிரமா வாங்க..!!
இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3 வது ஒருநாள் போட்டிக்கான நுழைவு சீட்டு விற்பனை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நாக்பூரில் நடந்த முதலாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2 வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
3 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 4 வது மற்றும் கடைசி போட்டி ஆமாதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், பாரத பிரதமர் நரேந்திர மோடி இருவரும் கண்டு ரசித்தனர். முதல் நாள் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் சேர்த்துள்ளது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்பு இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெற உள்ளது.
ஒருநாள் போட்டி தொடரின் 3 வது மற்றும் கடைசி போட்டி வரும் 22 ஆம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான நுழைவு சீட்டு விற்பனை குறித்த அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
இந்த போட்டிக்கான நுழைவு சீட்டுகள் விற்பனை இணையதளம் வாயிலாக வரும் 13 ஆம் தேதியும், நேரடியாக வரும் 17 ஆம் தேதியும் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், நுழைவு சீட்டின் குறைந்தபட்ச விலை ரூ.1200 ஆகவும், அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.