மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் 3 வது ஒருநாள் போட்டி...!! தீவிர பயிற்சியில் இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள்..!!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது.
மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2 வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
இந்த போட்டிக்கான நுழைவு சீட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இதற்கிடையே, கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள் நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தனர். இரு அணி வீரர்களும் இன்று பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அதில் 7 போட்டிகளில்ல் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை இந்த மைதானத்தில் 5 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றிகளை பெற்றுள்ளது.