பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாக்கிஸ்தான் வெளியேறியதற்கு இந்திய அணி காரணம் இல்லை - சர்பராஸ் அகமது பேட்டி!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் கலந்துகொண்ட பாக்கிஸ்தான் அணி லீக் சுற்றில் வெளியேறியது.
இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோற்றதால் தான் பாக்கிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியதாகவும் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்ததாகவும் பாக்கிஸ்தானில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தொடரிலிருந்து வெளியேறிய பாக்கிஸ்தான் அணி சொந்த நாட்டிற்கு திரும்பியது. நேற்று பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பாக்கிஸ்தான் அணி வெளியேற இந்தியா தான் காரணம் என கூறுவது தவறு. இந்தியா இங்கிலாந்திடம் வேண்டுமென்றே தோற்கவில்லை. மாறாக இங்கிலாந்து அணி தனது முழு பலத்துடன் சிறப்பாக ஆடி தான் வெற்றிபெற்றது" என கூறியுள்ளார்.